எடப்பள்ளி சாய்பாபா கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்


குன்னூர்: நீலகிரி மாவட்டத்துக்கு 5 நாள் சுற்றுப் பயணமாக வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் திரைப்பட நடிகை சரண்யா ஆகியோ எடப்பள்ளி சாய்பாபா கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடுகள் நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற உள்ள உலகப் புகழ் பெற்ற 127 வது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உதகைக்கு 5 நாள் சுற்றுப் பயணம் ஆக வந்துள்ளார். இவருடன் மனைவி துர்கா ஸ்டாலின் வந்துள்ளார்.

இந்நிலையில், குன்னூர் எடப்பள்ளி அருகே உள்ள சாய் பாபா கோவிலுக்கு வழிபாடு செய்ய துர்கா ஸ்டாலின் மற்றும் திரைப்பட நடிகை சரண்யா மற்றும் குடும்பத்தினர் வந்தனர். இவர்கள் சாய் பாபாவின் முன்புறம் உள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து மலர் தூவி சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும், அங்குள்ள விநாயகர், முருகன், அம்மன் உள்ளிட்ட கோயில்களை சுற்றி வலம் வந்தார். சாய் பாபா தர்மஸ்தலா சுவாமினி சக்திமா, சாய் பாபா சிலைகள் வழங்கி ஆசிர்வாதம் செய்தார். பின்பு அங்கிருந்து உதகைக்குச் சென்றனர்.

x