அன்புமணியிடம் நல்ல மாற்றம்: திருமாவளவன் வரவேற்பு


மதுரை: ​விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் எம்​.பி. மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: மதச்​சார்​பின்​மை​யைக் காக்​கும் வகை​யில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி சார்​பில் வரும் 31-ம் தேதி திருச்​சி​யில் நடை​பெறும் மக்​கள் எழுச்​சிப் பேரணி​யில் மதவாதத்​துக்கு எதி​ரான அனை​வரும் பங்​கேற்க வேண்​டும். சாதி​வாரி கணக்​கெடுப்பு எப்​போது நடத்​தப்​படும் என்று கூற​வில்​லை. பிஹார் தேர்​தலுக்​கான கண் துடைப்பு அறி​விப்​பாகவே இதைப் பார்க்​கிறோம்.

புதுக்​கோட்டை வடகாடு கிராமக் கோயில் விவ​காரத்​தில் ஏற்​பட்ட மோதலில் தலித் மக்​களைத் தாக்​கியதுடன், அவர்​கள் மீதே காவல் துறை நடவடிக்கை எடுத்​தது வேதனையளிக்​கிறது. இது தொடர்​பாக ஆர்ப்​பாட்​டம் நடத்த காவல் துறை அனு​மதி மறுத்​த​தால், நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​துள்​ளோம். மரத்தை வெட்​டுங்​கள், கல்​லெடுத்து அடி​யுங்​கள் என்று கூறிய அன்​புமணி ராம​தாஸ், தற்​போது படி​யுங்​கள் என்று சொல்​லும் அளவுக்கு பண்​பாள​ராக மாறி​யிருப்​பது வரவேற்​கத்​தக்​கது. இவ்​வாறு திரு​மாவளவன் கூறி​னார்​.

x