பேச்சுவார்த்தை தோல்வி: விருதுநகரில் தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்


விருதுநகர்: ராஜபாளையம் சிறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக விருதுநகரில் நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி, சுந்தர பாண்டியம், சமுசிகாபுரம், அய்னாபுரம் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் சிறு விசைத்தறிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு மருத்துவ பேண்டேஜ் துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுக மாகவும் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்த்தப்படுவது வழக்கம். இதற்காக பேச்சுவார்த்தைக் கூட்டம் நடத்தப்பட்டு பேண்டேஜ் துணி உற்பத்தியாளர் களிடம் ஒப்பந்தம் செய்யப்படும்.

இந்நிலையில், கடந்த 2022 ஜூன் 6-ம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 16 மீட்டர் பேண்டேஜ் துணி உற்பத்தி க்கு முதல் ஆண்டு 6 பைசாவும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு 4 பைசாவும் உயர்த்தி வழங்கப்பட்டது. விசைத்தறி உரியையாளர்களுக்கு முதல் ஆண்டு 18 பைசாவும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 12 பைசாவும் அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலை 12 பைசாவும் கூலி உயர்வு வழங்கக் கோரி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், விருதுநகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் பேன்டேஜ் துணி உற்பத்தியாளர் கள், சிறு விசைத் தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) கோடீஸ்வரி தலைமையில் இன்று நடைபெற்றது.

இப்போது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று சிறு விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கும் இந்த ஆண்டு 13.50 பைசாவும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 9 பைசாவும் உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், உற்பத்தியாளர்கள் தரப்பில் இந்த ஆண்டு 12 பைசாவும், அடுத்த இரு ஆண்டுகளுக்கு தலா 8 பைசாவும் உயர்த்தி வழங்குவதாகத் தெரிவித்தனர்.

இதில், உடன்பாடு ஏற்படவில்லை. அதையடுத்து, மீண்டும் அடுத்தக்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தை இன்று (14ம் தேதி) சத்திரப்பட்டியில் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. இதனால், சிறு விசைத்தறி உரிமையாளர்களின் காலை வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது.

x