முதல்வர் ஸ்டாலின் ‘செவிலியர் தின’ வாழ்த்து: “தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி,மதம், நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாள் வாழ்த்துகள்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“கள்ளழகரின் அருள் தேசத்துக்கு வளத்தை கொண்டு வரட்டும்” - ஆளுநர்: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டம் நமது பாரம்பரியத்தின் வலிமையையும், காலத்தால் அழியாத ஒற்றுமையில் நம்மை ஒன்றிணைக்கும் உணர்வையும் தெளிவாக பிரதிபலிக்கிறது, என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலி: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், கூட்ட நெசில் சிக்கிய ஒருவரும் உயிரிழந்த சம்பவம் மதுரையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் யானைக்கல் கல்பாலம் அருகே கூட்டநெரிசலில் சிக்கிய கண்ணன் (43) என்பவரும் உயிரிழந்தார். இந்த சம்பவங்கள், பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது!: இன்று தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ஒரு கிராம் ரூ.8,880-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,040-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனையாகிறது.
வானதி சீனிவாசன் இந்தியாவுக்கு புகழாரம்: பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்தது இந்தியா என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதற்கு போட்டியாக பாகிஸ்தான் தொடங்கிய 'பன்யான் உல் மர்சூஸ்' ஆகிய இரண்டுக்கும் கிடைத்த பலன்கள் குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.