மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசு: பழனிசாமி கண்டனம்


சேலம்: மக்​களின் பிரச்​சினை​களைத் தீர்ப்​ப​தில் திமுக அரசு கவனம் செலுத்​த​வில்​லை. என எதிர்க்​கட்​சித் தலை​வரும், அதி​முக பொதுச் செய​லா​ள​ரு​மான பழனி​சாமி தெரி​வித்​தார்.

இதுகுறித்து சேலத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: ஆட்​சி​யில் இருந்​தா​லும் இல்​லா​விட்​டாலும் மக்​களுக்​காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி அதி​முக. திமுக ஆட்​சிக்கு வந்​தது முதல் தமிழகத்​தில் சட்​டம் - ஒழுங்கு சந்தி சிரிக்​கிறது. நாள்​தோறும் கொலை, கொள்​ளை, பாலியல் வன்​கொடுமை நிகழ்​வு​கள் நடந்த வண்​ணம் உள்​ளன.

அண்​மை​யில் 2 இடங்​களில் புகார் கொடுக்க வந்த பெண்​களிடம் காவல்​துறையைச் சேர்ந்​தவர்​களே அத்​து​மீறி நடந்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திமுக ஆட்​சி​யில் பொது​மக்​கள், பெண்​கள் என யாருக்​கும் பாது​காப்பு இல்​லாத நிலையே உள்​ளது. நாட்​டில் நில​வும் பிரச்​சினை​களை ஊடகங்​கள் முழு​மை​யாக வெளி​யிட வேண்​டும்.

டெல்​லி​யில் உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​தித்​த​போது தமிழகத்​தின் நலனுக்​காக பல்​வேறு கோரிக்​கைகளை மனு​வாக கொடுத்​தோம். அந்த கோரிக்​கைகள் அனைத்​தும் ஒன்​றன்​பின் ஒன்​றாக நிறைவேற்​றப்​பட்டு வரு​கின்றன. 100 நாள் வேலைத் திட்​டத்​துக்​கான நிதி ஒதுக்​கீடு, மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்​டத்​துக்​கான நிதி ஒதுக்​கீடு, சாதி​வாரி கணக்​கெடுப்பு அறி​விப்பு என எங்​கள் கோரிக்​கைகளை நிறைவேற்​றிய உள்​துறை அமைச்​சருக்கு நன்​றியை தெரி​வித்து கொள்​கிறேன்.

அதி​முக ஆட்​சி​யில் அனைத்​துத் துறை​களும் சிறப்​பாக செயல்​பட்​டன. ஆனால், முதல்​வர் ஸ்டா​லின் மாடல் ஆட்​சி​யில் மக்​களின் பிரச்​சினை​கள் ஆட்​சி​யாளர்​களின்காதில் விழு​வது இல்​லை. கட்​டாய கல்வி உரிமைச் சட்​டத்​தின் கீழ் மாணவர்​களைச் சேர்ப்​ப​தற்கு நிதி ஒதுக்​கீடு செய்​யாதது கண்​டிக்​கத்​தக்​கது. மக்​களின் பிரச்​சினை​யில் தமிழக அரசு கவனம் செலுத்​தாமல் இருப்​பதை வன்​மை​யாகக் கண்​டிக்​கிறோம். சட்​டப்​பேர​வை தேர்​தலுக்காக பாஜக-வுடன் கூட்​டணி வைத்​துள்​ளோம். தேர்​தலுக்கு இன்​னும் 9 மாத காலம் இருக்​கிறது. இன்​னும் பல கட்​சிகள் எங்​களது கூட்​ட​ணி​யில் இணை​யும்.

ஆட்​சிக்கு வரு​வதற்கு முன்பு 3.5 லட்​சம் அரசுப் பணி​யிடங்​கள், 2 லட்​சம் அரசு சார்பு பணி​யிடங்​களை நிரப்​புவ​தாக கூறிய திமுக, ஆட்​சிக்கு வந்த 4 ஆண்​டில் 78 ஆயிரம் பணி​யிடங்​களை மட்​டுமே நிரப்​பி​யுள்​ளது. சட்​டப்​பேர​வை​யில் எனது பேச்சு முழு​மை​யாக ஒளிபரப்​பி​னால் திமுக ஆட்சி உடனடி​யாக அதல பாதாளத்​துக்கு போய்​விடும். முதல்​வர் ஸ்டா​லின் செய்​தி​யாளர்​களைச் சந்​திப்​பதே இல்​லை. அப்​படியே நடந்​தா​லும், கேள்வி​கள் முன்​கூட்​டியே அளிக்​கப்​பட்​டு, அந்த கேள்வி​களை மட்​டுமே கேட்க செய்​தி​யாளர்​கள் நிர்ப்​பந்​திக்​கப்​படு​கிறார்​கள்.

பஹல்​காமில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்தானில் தீவிர​வாத முகாம்​களை கண்​டறிந்து இந்​திய ராணுவம் நடத்​திய தாக்​குதல் பாராட்​டுக்​குரியது. பயங்​கர​வாதத்தை முறியடிக்​கும் வித​மாக ராணுவம் எடுத்​துள்ள முதல்​கட்ட பணிக்கு அதி​முக சார்​பில்​ வாழ்த்​துகளை தெரி​வித்​துக்​ கொள்​கிறேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

x