[X] Close

தாமதிக்கப்பட்ட நிதியும் மறுக்கப்பட்ட நிதிதான்; காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் - கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்


gaja-delta-vairamuthu

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 14:45 pm
  • அ+ அ-

தாமதிக்கப்பட்ட நீதி மட்டுமல்ல, தாமதிக்கப்பட்ட நிதி கூட மறுக்கப்பட்ட நிதிதான். விரைந்து நிதி வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்களும் அருகில் உள்ள மாவட்டங்களும் மொத்தமாக உருக்குலைந்துவிட்டன. தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் மக்கள்.

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விரைந்து நிதி வழங்க மத்திய அரசைத் துயரத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.

தாமதிக்கப்படும் நீதி மட்டுமன்று தாமதிக்கப்படும் நிதியும் மறுக்கப்பட்டதாகவே ஆகிவிடும்.

காற்றால் மூச்சுப்போன குடும்பங்களைக் காப்பாற்றுங்கள்.

இவ்வாறு வைரமுத்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close