அதிர்ச்சி வீடியோ... திடீரென சரிந்து விழுந்த மின்கம்பம்; நூலிழையில் உயிர்தப்பிய ஆ.ராசா!


மயிலாடுதுறை: திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசிக்கொண்டிருந்த போடியம் மீது திடீரென மின்விளக்குத் தூண் சரிந்து விழுந்தது. உடனே சுதாரித்த ஆ.ராசா அங்கிருந்து நகர்ந்ததால் நூலிழையில் தப்பினார்.

மயிலாடுதுறையில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் திமுக எம்பி. ஆ.ராசா பங்கேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே பலத்த சூறைக்காற்று காரணமாக மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குத் தூண் திடீரென சாய்ந்தது.

அந்த மின் விளக்கு கம்பம் நேராக ஆ.ராசா பேசிக்கொண்டிருந்த போடியம் மீது விழுந்தது. இதனை பார்த்து சுதாரித்த ஆ.ராசா சட்டென அங்கிருந்து விலகியதால் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் மேடையிலும், அந்த பொதுக்கூட்டத்திலும் பெரும் சலசலப்பு உருவானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

x