எம் சாண்ட், ஜல்லி ஒரு யூனிட் ரூ.4,000-க்கு விற்பனை: கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் தகவல்


கல் குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப் பதாவது: சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், கடந்த மாதம் 27ம் தேதி காலை 10 மணி அளவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இயற்கை வளங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் சரவண வேல் ராஜ், கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.சின்னச்சாமி மற்றும் மாநில சங்கத்தின் உறுப்பினர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஜல்லி ஒரு யூனிட் ரூ.4 ஆயிரம், எம். சாண்ட் ஒரு யூனிட் ரூ.5 ஆயிரம், பி.சாண்ட் ஒரு யூனிட் ரூ.6 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டு, மேற்கண்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், எம்.சாண்ட் ஜல்லி விலை குறையவில்லை என்ற செய்திக்கு சங்கத்தின் சார்பாக நாங்கள் மறுப்பு தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x