சென்னை: ‘டயங்கரம்’ என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் வி.ஜே.சித்து.
முன்னணி யூடியூபராக வலம் வரும் வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிச் செய்யும் விதமாக வி.ஜே.சித்து இயக்குநராக அறிமுகமாகும் அறிவிப்பு வீடியோ பதிவினை தனுஷ் வெளியிட்டுள்ளார். இப்படத்தினை எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் வி.ஜே.சித்து.
வி.ஜே.சித்து இயக்கவுள்ள இப்படத்துக்கு ‘டயங்கரம்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. இதில் வி.ஜே.சித்து உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து இந்த ஆண்டே படத்தினை வெளியிடவுள்ளார்கள்.