சென்னை: தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 8,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8,775 ரூபாயாகவும், சவரனுக்கு 70 ஆயிரத்து 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 20 ரூபாய் குறைந்து 8,755 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. எனவே ஒரு கிராம் வெள்ளி, இன்று 109 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.