[X] Close

'பெரியமனுஷி’; தனிக்குடிசையில் விடப்பட்ட சிறுமி; மரம் குடிசையில் விழுந்து இறந்த சோகம் - கவிஞர் சல்மா வேதனை


gaja-salma

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 12:17 pm
  • அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு அருகில் உள்ளது அணைக்காடு கிராமம். கஜா புயல், சுழற்றிப் போட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. டெல்டா மாவட்டங்களை அப்படியே புரட்டிப் போட்டதில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மரங்கள் வேரோடு விழுந்தன. பயிர்கள் நாசமாகின. இன்னும் ஏராளமானோர் வீடுகள் மீது மரங்கள் விழுந்து இடிந்தன.

உடைமையை இழந்து, மாடு கன்றுகளை இழந்து, பிள்ளையைப் போல் வளர்த்த தென்னையை இழந்து, மரங்களை இழந்து, பயிர்களை இழந்து, வாழ்வாதாரத்தையே இழந்து தவித்து வருகிறார்கள் டெல்டா பகுதி மக்கள்.

இப்படியொரு சோகங்களுக்கு நடுவே அணைக்காடு கிராமத்தில் நடந்தது இன்னும் சோகக் கொடுமை.

இதுகுறித்து கவிஞர் சல்மா, தன் முகநூலில் அதைப் பதிவிட்டுள்ளார்.

அந்தக் குழந்தையின் பெயர் விஜயா. ஏழாம் வகுப்பு மாணவி. வயதிற்கு வந்து விட்டாள். முதல் தீட்டு. தனிக் குடிசை போட்டு தோட்டத்தில் தனியாக இருக்க வைத்திருக்கிறார்கள் .

அன்றைய முழு இரவும் புயல் காற்றின் சத்தம். கஜா புயல் தன் கொடூரக்கரங்களால் மொத்த டெல்டா மாவட்டத்தையே கலைத்துக் குலைத்துப் போட்டு, கோரத்தாண்டவமாடிய துக்கமான நாள்.  

அந்தப் புயல் காற்றைத் தொடர்ந்து மரங்கள் விழும் சத்தம். அவளது குடிசை மீது மரம் விழுந்து அந்தக் குழந்தையின் உயிரையே பறித்துவிட்டது.

குழந்தையை, வயதுக்கு வந்திருக்கிற அந்தச் சிறுமியை, இரவு நேரத்தில் தனித்து இருக்க வைத்து இருக்கிறார்கள் . அவள் எப்படி பயந்து அலறி இருப்பாள் என்று நினைக்க நினைக்க மனம் பதறுகிறது.

இந்த காலத்திலும் முதல் தீட்டு என்று கடைபிடிக்கும் நம்பிக்கைகள் என்பது வேதனையைத் தருகிறது. என்னதான் ‘பெரியவள்’ ஆகிவிட்டாள் என்று கிராமத்தின் வழக்குப் பேச்சில் சொன்னாலும், அவளும் குழந்தைதானே...!

இவ்வாறு கவிஞர் சல்மா கண்ணீருடன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close