திருவண்ணாமலை: 2 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் கே.துரைராஜ். இவர், தண்டராம்பட்டு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தண்டராம்பட்டு வட்டாட்சியராக பணியாற்றி வந்த எஸ்.மோகனராமன், திருவண்ணாமலை வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியராக செங்கம் மண்டல துணை வட்டாட்சியர் என்.திருநாவுக்கரசும், தண்டராம்பட்டு மண்டல துணை வட்டாட்சியராகவும், திருவண்ணாமலை மண்டல துணை வட்டாட்சியர் ப.மணவாளனும், செங்கம் (தேர்தல்) துணை வட்டாட்சியராகவும் தண்டராம்பட்டு மண்டல துணை வட்டாட்சியர் விஜயகுமாரும், செங்கம் மண்டல துணை வட்டாட்சியராகவும், செங்கம் துணை வட்டாட்சியராக (தேர்தல்) கே.அழகு பாண்டீஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என ஆட்சியரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.