சிவகங்கை மாவட்ட திமுகவில் 3 புதிய ஒன்றிய செயலாளர் பதவிகள் உருவாக்கம்: 2026 தேர்தலுக்கு ஆயத்தம்!


சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுகவில் 3 புதிய ஒன்றியச் செயலாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக கட்சி அமைப்பில் சில மாறுதல்களை செய்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஒன்றியத்தில் கிழக்கு, மேற்கு என 2 ஒன்றியச் செயலாளர் பதவிகள் இருந்தன. தற்போது, கூடுதலாக தெற்கு ஒன்றியச் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. கிழக்கு ஒன்றியச் செயலாளராக கடம்பசாமி, மேற்கு ஒன்றியச் செயலாளராக வசந்தி, தெற்கு ஒன்றியச் செயலாளராக சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டனர்.

சிவகங்கை ஒன்றியத்தில் தெற்கு, வடக்கு என 2 ஒன்றியச் செயலாளர் பதவிகள் இருந்தன. தற்போது கூடுதலாக மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. இதில் தெற்கு ஒன்றியச் செயலாளராக ஜெயராமன், வடக்கு ஒன்றியச் செயலாளராக முத்துராமலிங்கம், மேற்கு ஒன்றியச் செயலாளராக மந்தகாளை நியமிக்கப்பட்டனர்.

மானாமதுரை ஒன்றியத்தில் கிழக்கு, மேற்கு என 2 ஒன்றியச் செயலாளர் பதவிகள் உள்ளன. தற்போது கூடுதலாக வடக்கு ஒன்றியச் செயலாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. இதில் கிழக்கு ஒன்றியச் செயலாளராக ராஜாமணி, மேற்கு ஒன்றியச் செயலாளராக அண்ணாத்துரை, வடக்கு ஒன்றியச் செயலாளராக முத்துச் சாமி நியமிக்கப்பட்டனர்.

x