ராமநாதபுரத்தில் கோடை கால பயிற்சி வகுப்பு முகாம்கள்: பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு


கோப்புப் படம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக சார்பில் நடத்தப்படும் கோடை கால பயிற்சி வகுப்பு முகாம்களில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பாக ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் டி.டி. விநாயகர் தொடக்கப்பள்ளியில் 6 வயது முதல் 16 வயதுடைய மாணவ மாணவிகள் கோடைகாலத்தை பயனுள்ளதாக செலவிடும் நோக்கில் மாணவர்களுக்கான கோடைகால இலவச கலைப் பயிற்சி முகாம் 1.05.2024.முதல் 20.05.2024 தேதி வரையிலும் நடைபெறுகிறது.

இந்த பயிற்சி முகாமில் பரதநாட்டியம், ஓவியம், குரலிசை (வாய்பாட்டு), சிலம்பம், நாட்டுப்புற கலைகள் ஆகியவை கற்றுத் தரப்பட உள்ளது. பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் . மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியனை 9842567308 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

x