இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணியில் ஷமி


மும்பை: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளார்.

கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட 34 வயதான அவர், கடைசியாக 2023-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தார். சிட்னி டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த ஜஸ்பிரீத் பும்ரா தேர்வு செய்யப்படவில்லலை. இதேபோன்று ரியான் பராக், தோள்பட்டை காயத்தால் இடம் பெறவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத நித்திஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

அணி விவரம்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, துருவ் ஜூரெல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

x