[X] Close

‘டிராவிட் மாதிரி நடந்து கொள்ளுங்கள்’: விராட் கோலியை மீண்டும் விமர்சித்த நடிகர் சித்தார்த்


siddharth-condemns-kohli-speech

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 20:46 pm
  • அ+ அ-

வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ரசிகர்களும், நெட்டிசன்களும் வறுத்தெடுத்த நிலையில், மழுப்பலாக ட்விட்டரில் கோலி விளக்கம் அளித்திருந்தார். அதை ஏற்காத நடிகர் சித்தார்த் மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விராட் கோலி தனது பிறந்த நாளை முன்னிட்டு புதிய ஆப்ஸ் வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு ரசிகர் பதிவிட்ட கருத்தில், ''விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன்'' என்று சாடியிருந்தார்.

அவருக்குப் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்ட விராட், ''இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை'' என்று கருத்து தெரிவித்தார். இந்தக் கருத்து ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் கிளப்பி மிகக்காட்டமான கருத்துகளைப் பதிவிட்டு இருந்தனர்.

தனது பேச்சுக்கு நாளுக்கு நாள் கண்டனம் வலுத்து வருவதை அறிந்த விராட் கோலி ட்விட்டரில் இன்று மழுப்பலாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ ரசிகர்கள் என்னை டிரால் செய்யவில்லை, என்னை விமர்சிக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுத்தான் பேசினேன். அவ்வளவுதான்'' எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி பெயரைக் குறிப்பிடாமல் நடிகர் சித்தார்த் மீண்டும் விமர்சித்துள்ளார். ட்விட்டரில் நடிகர் சித்தார்த் பதிவிட்ட கருத்தில், “நான் இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை. நான் ஹாலிவுட் படங்கள் மட்டுமே பார்ப்பேன். தென்னிந்தியப் படங்கள் எல்லாம் சும்மா, சாதாரணமானது. இதுபோன்ற படங்களைப் பார்ப்பதில்லை. இவற்றைப் பார்ப்பது நேரத்தை வீணடிப்பது போன்றது என்று பலவீனமான, ஏற்கமுடியாத காரணத்தைக் கூறுவார்கள். நான் இதுபோன்ற வார்த்தைகளை அதிகம் கேட்டிருக்கிறேன். இதை இன்னும் கேட்கிறோம், அதோடு கடந்து செல்கிறோம். டிராவிட் போன்று நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலையில் சித்தார்த் தனது ட்விட்டரில் கோலி குறித்துக் கூறுகையில், "நீங்கள் இனிமேலும் கிங் கோலி என்ற அடைமொழியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினீர்கள் என்றால் உங்களுக்கு நீங்கள் பாடம் கற்பித்துக் கொள்ளும் தருணம் வந்துவிட்டது என்றே அர்த்தம். அடுத்த முறை எதிர்காலத்தில், இது போன்ற சூழலில் டிராவிட்டாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்பதை யோசித்துப் பேசுங்கள். இந்திய அணியின் கேப்டனிடமிருந்து இப்படி ஒரு முட்டாள்தனமான வார்த்தைகளா?" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close