[X] Close

தலைவிதியை மாற்றிய அந்த ஓவர்: ஜமான், பாபர் ஆஸம், ஹபீஸைக் காலி செய்த போல்ட்டின் ஹாட்ரிக்; பாகிஸ்தான் தோல்வி


hattrick-wicket-for-boult

ஹாட்ரிக் சாதனை புரிந்த ட்ரெண்ட் போல்ட். | ஏ.எப்.பி.

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 12:25 pm
  • அ+ அ-

அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தின் இடது கை ஸ்விங் பவுலர் ட்ரெண்ட் போல்ட், ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த பாகிஸ்தான் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து டெய்லர் (80), லேதம் (68) அரைசதங்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி போல்ட்டின் ஹாட்ரிக் சாதனையினால் 85/6 என்று சரிவு கண்டது, ஆனால் அதன் பிறகு கேப்டன் சர்பராஸ் அகமட் (64), இமாத் வாசிம் (50) ஆகியோரது 103 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் மீண்டு அச்சுறுத்தியது. ஆனால் இருவரும் அவுட் ஆக ஸ்கோர் 219 ஆக இருக்கும் போதே கடைசி 3 விக்கெட்டுகளை இழந்து தோற்றது பாகிஸ்தான்.

டி20 தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது பாகிஸ்தான், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது நியூசிலாந்தின் ஆட்டம். மேலும் இது நியூஸிலாந்து அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்ச்சியான 12வது வெற்றியாகும்.

நியூஸிலாந்து பேட் செய்த போது ராஸ் டெய்லர், டாம் லேதம் ஆகியோரின் 130 ரன்கள் கூட்டணியினால் 266 ரன்களை எட்டியது. இலக்கை விரட்டிய போது பாகிஸ்தான் தலைவிதியை முடித்த அந்த ட்ரெண்ட் போல்ட்டின் 3வது ஓவர். முதலில் பார்மைத் தேடிக்கொண்டிருக்கும் ஃபகார் ஜமான், போல்ட் பந்தில் பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார். பாபர் ஆஸம் வைடு யார்க்கரை தொட முயன்று எட்ஜ் ஆகி வெளியேறினார், மொகமது ஹபீஸ் ஹாட்ரிக் வீரராக போல்ட்டிடம் சிக்கினார், ஆனால் இது கிரேட் டெலிவரி, இன்ஸ்விங்கரை கால்காப்பில் வாங்கினார், போல்ட்டுக்கு ஹாட்ரிக் கொடுக்கக் கூடாது என்று ரிவியூவையும் விரயம் செய்தார். போல்ட் ஹாட்ரிக் இத்துடன் பாகிஸ்தான் தலைவிதியையும் முடித்தார், அதன் பிறகு சம்பிரதாயமான ஆட்டம்தான்.

ஷோயப் மாலிக் (30), இமாம் உல் ஹக் 63 ரன்கள் சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க, ஷதாப் கானுக்கு நடுவர் தவறான அவுட் கொடுத்தார், மட்டைக்கும் பந்துக்கும் நல்ல இடைவெளி இருக்கும் போதே கேட்ச் அவுட் கொடுத்தார். அப்போது இமாத், கேப்டன் சர்பராஸ் இணைந்தனர். இருவரும் சேர்ந்து 103 ரன்களை எடுத்தனர், பாகிஸ்தான் நிமிர்ந்து கொஞ்சம் நியூஸிலாந்தை அச்சுறுத்தியது, ஆனால் கொலின் டி கிராண்ட் ஹோம் பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொண்டு வெளியேறினார் சர்பராஸ். அப்போதே அனைத்தும் முடிந்து விட்டது.

நியூஸிலாந்தும் டாஸ் வென்று ஆடிய போது சரியாக ஆடவில்லை. 17 ஓவர்களில் 78/3 என்று மந்தமாக ஆடியது, வில்லியம்சன் 38 பந்துகளில் 27 ரன்கள் என்று ஆடிய போது ஷதாப் கானின் ஆக மோசமான ஷார்ட் பிட்ச் பந்தை அதைவிட மோசமாக அடித்து லெக் திசையில் கேட்ச் ஆகி வெளியேறினார். டெய்லர், லேதம் இருவரும் பாகிஸ்தான் ஸ்பின் அச்சுறுத்தலை திறம்பட எதிர்கொண்டனர். இருவரும் 130 ரன்களைச் சேர்த்த போது ஷதாப் கான் ஒரே ஓவரில் லேதம், நிகோல்ஸ், கொலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோரை வீழ்த்தினார், ஹாட்ரிக் வாய்ப்பு கைகூடவில்லை. கடைசியில் இஷ் சோதி, டிம் சவுதி கொஞ்சம் விளாச நியூஸிலாந்து 266/9 என்று முடிந்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் ஷா அப்ரீடி, சதாப் கான் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 219 ரன்களுக்கு மடிந்து தோல்வி கண்டது. போல்ட் ஹாட்ரிக் சாதனை, பெர்கூசன் 3 விக்கெட், கிராண்ட் ஹோம் 2 விக்கெட். ஆட்ட நாயகன் போல்ட்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close