[X] Close

கேட்ச்சைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாரா கிரன் பொலார்ட்?- கடுப்பான பும்ரா


giran-bollard-vs-bumrah

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 14:57 pm
  • அ+ அ-

லக்னோவின்புதிய பிரமாத ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் மோசமாக ஆடிய மே.இ.தீவுகளை ஊதி தொடரை வென்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் அதிரடி சதம் கண்ட ரோஹித் சர்மா பல சாதனைகளை முறியடித்தார்.

எளிதாக இந்தப் போட்டியில் வென்றாலும் சில சம்பவங்கள் தவிர்க்க முடியாது நிகழ்வது கிரிக்கெட்டில் இயல்பு. மே.இ.தீவுகள் 3 கேட்ச்களை விட்டு, மிஸ்பீல்ட் செய்து நோ-பால்கள், வைடுகள் வீசியதை விட கெய்ரன் பொலார்ட் செய்தது வேண்டுமென்றே செய்த தவறு போல் தோன்றவில்லை என்றாலும் பும்ரா கடுப்பானதிலும் நியாயம் உள்ளது.

மே.இ.தீவுகள் இலக்கை விரட்டும் போது 11வது ஓவரை பும்ரா வீசினார், அந்த ஓவரில் ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் எகிற பொலார்ட் மட்டையின் டாப் எட்ஜ் ஆகி கொடியேற்றினார்.

அந்தக் கேட்சை பவுலர் பும்ராவே எடுக்க முன்னேறி வந்த போது பொலார்ட் பும்ராவை நோக்கி தன் நடையை மேற்கொண்டார், அவர் பெவிலியனை நோக்கித்தான் சென்றார், ஆனால் கேட்சின் பாதையில் மறிப்பது போல் சென்றதால் பிரச்சினையானது, பும்ரா கேட்சைப் பிடிக்கும் தறுவாயில் கிட்டத்தட்ட அதைத் தட்டிவிடும் அளவுக்கு அருகில் இருந்தார் பொலார்ட், ஆனால் கடைசியில் தன் தவற்றை உணர்ந்து ஒதுங்கிக் கொண்டார்.

அதோடு மட்டுமல்லாமல் கையை உயர்த்தி ‘சாரி’ என்பது போல்தான் அவர் சென்றார். ஆனால் பும்ராவுக்கு சரியான கோபம் ஏற்பட்டது, காரணம் பொலார்ட் வேண்டுமென்றே அப்படிச் செய்திருக்கலாம் என்று பும்ரா நம்பியிருக்கலாம்.

இருவரும் ஐபிஎல் அணிக்காக மும்பை இந்தியன்சுக்கு ஆடும் சகாக்கள், ஆனாலும் கேட்சை பிடிக்க முடியாமல் போயிருந்தால் நிச்சயம் ‘பீல்டரைத் தடுத்ததற்காக’ பொலார்ட் ஆட்டமிழந்திருப்பார், ஆனால் விக்கெட் பும்ராவுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.

பும்ரா கொஞ்சம் ரியாக்ட் செய்ய அப்போது ஆட்டத்தில் சிறுநிமிடம் பரபரப்பு ஏற்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close