தொடரை இழந்த வங்கதேச அணிக்கு ஆறுதல் வெற்றி... கடைசி டி20யில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அமெரிக்கா!


வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் முஸ்தபிசுர் ரகுமான்

அமெரிக்கா அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்பில் விளையாடி வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் அமெரிக்கா அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தது. இதைத்தொடர்ந்து 3வது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வங்கதேச கிரிக்கெட் அணி

இதையடுத்து களமிறங்கிய அமெரிக்க அணியில் கேப்டன் மொனாங்க் பட்டேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஆரோன் ஜோன்ஸ் கேப்டனாக செயல்பட்டார். துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜஹாங்கீர் 18 ரன்களும், கவுஸ் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கோரி ஆண்டர்சன் மட்டும் 18 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. வங்கதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முஸதபிசுர் ரகுமான் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த்தினார்.

அமெரிக்கா கிரிக்கெட் அணி

105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹசன் மற்றும் சௌமியா சர்க்கார் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹசன் 58 ரன்களும், சர்க்கார் 43 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் 11.4 ஓவர் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கான 108 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் அமெரிக்கா அணி கைப்பற்றி உள்ளது. தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகனாக முஸ்தபிசுர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டார்.

x