கருணை காட்டிய மழை... டாஸ் வென்றது சென்னை அணி; முதலில் பேட் செய்கிறது பெங்களூரு!


கோலி தோனி

இன்றைய ஐபிஎல் போட்டியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பெற்றுவிட்டது. ப்ளே ஆஃப்- க்குத் தகுதி பெற உள்ள கடைசி அணி யார் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான லீக் போட்டியாக இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆட்டம் உள்ளது.

சென்னை பெங்களூரு

இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலே நேரடியாக ப்ளே ஆஃப் சுற்றுக்குத் சென்னை தகுதி பெறும். அதே நேரத்தில் இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை அணி நிர்ணயிக்கும் இலக்கை பெங்களூரு அணி 18.1 ஓவரில் எட்டினால் ப்ளேஆஃப் சுற்றுக்கு பெங்களூரு தகுதி பெறும். இல்லை என்றால் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்த வேண்டும், இவ்வாறு வீழ்த்தினால் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். மேற்குறிப்பிட்ட வித்தியாசங்களைவிடக் குறைவான வித்தியாசங்களுடன் பெங்களூரு அணி வெற்றிபெற்றாலும்கூட, சென்னை அணியே ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

தோனி கோலி

இவ்வளவு இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், பெங்களூருவில் இன்று மாலை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்தனர். ஆனால் இன்று காலை முதல் வெயில் கொளுத்தி எடுத்தது. இருப்பினும் மதியம் நேரம் ஆனவுடன் யாருமே எதிர்பார்க்காத வகையில் பெங்களூரில் மழை கொட்டியது. இதனால் பெங்களூரு ரசிகர்கள் கவலையிலும், சென்னை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியிலும் இருந்தனர்.

இதனால் இன்றைய ஆட்டம் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவியது. இந்த நிலையில், தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் டாஸ் போடப்பட்டுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. எனவே பெங்களூரு அணி முதலில் பேட் செய்யவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x