பெங்களூருவில் விராட் கோலிக்கு காத்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பரிசு!


கோலிக்கு துபாகேரே பலாப்பழத்தை வழங்க வந்துள்ள அம்பரீஷ்.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், விராட் கோலிக்கு உலகப்புகழ் பெற்ற துபாகேரே பலாப்பழத்தைப் பரிசு வழங்க விவசாயி ஒருவர் வந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் (202) திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன. இந்த இரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் மோதியுள்ளன. ஆர்சிபி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், சிஎஸ்கே 21 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு போட்டி சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. தற்போது இரு அணிகளும் 33வது முறையாக நேருக்கு நேர் மோத உள்ளன.

தோனி, விராட் கோலி

ஐபிஎல் 68வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியின் போது விராட் கோலிக்கு ரசிகர் ஒருவர் சிறப்பு பரிசு வழங்க முன்வந்துள்ளார். அது என்னவென்று நினைக்கிறீர்களா? உலகப் புகழ் பெற்ற துபாகெரே பலாப்பழம் தான் அது.

ஆர்சிபி அணியின் தீவிர ரசிகரான விவசாயி அம்பரீஷ், தொட்டபல்லாபூர் தாலுகாவின் துபாகெரேயில் இருந்து பலாப்பழத்துடன் பெங்களூரு வந்துள்ளார். இன்றைய போட்டியின் போது விராட் கோலிக்கு இந்த பலாப்பழத்தை பரிசளிக்க விரும்புகிறார். கர்நாடக மாநிலம், தொட்டபல்லாபூர் தாலுகா, துபாகெரேவில் விளையும் பலாப்பழங்கள் அதிக இனிப்புச்சுவை கொண்டவை. இதன் காரணமாக இந்த பழத்திற்கு உலகம் முழுவதும் மவுசு உள்ளது.

விராட் கோலி

இப்படிப்பட்ட பழத்துடன் பெங்களூரு வந்துள்ள விவசாயி அம்பரீஷ் கூறுகையில்," விராட் கோலிக்கு எப்படியாவது துபாகெரே பலாப்பழத்தை வழங்க வேண்டும். சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய வேண்டும்" என்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். கோயிலில் சிறப்பு பூஜை செய்து அம்பரீஷ் கொண்டு வந்துள்ள பலாப்பழம் விராட் கோலிக்கு கைக்கு கிடைக்குமா என்பது தான் கேள்வி.

இதையும் வாசிக்கலாமே...

x