[X] Close

பவுலருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு எதிர்கொண்ட ஸ்டான்ஸ்: ஆஸி. கிரிக்கெட் வீரர் ஜார்ஜ் பெய்லி நூதன உத்தி


george-bailey-incident

ஜார்ஜ் பெய்லியின் நூதன ஸ்டான்ஸ். | படம்: ட்விட்டர்

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 10:15 am
  • அ+ அ-

கிரிக்கெட்டில் விசித்திரமான ஸ்டான்ஸ் உடையவர்கள், அதாவது பந்தை எதிர்கொள்ள நிலையெடுக்கும் முறையில் நூதனமான பல உத்திகளைப் பலரும் கடைபிடித்துள்ளனர்.

பீட்டர் வில்லே என்ற இங்கிலாந்து வீரர் ஒருமுறை மிட்விக்கெட்டைப் பார்த்து ஸ்டான்ஸ் எடுக்க பார்வர்ட் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த நம் ஸ்ரீகாந்த், பவுலரிடம் ‘அப்பா இவர் இன்னும் ரெடியாகல’ என்று கூறியதை ஸ்ரீகாந்தே ஒரு பேட்டியில் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தியாவில் மொஹீந்தர் அமர்நாத், ஜாவேத் மியாண்டட், சந்தர்பால், பாகிஸ்தானின் இஜாஜ் அகமட், இன்னும் எத்தனையோ வீரர்கள் பலவிதமாக ஸ்டான்ஸ் வைத்துள்ளார்கள்.

சமீபத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமட் ஒரு விசித்திரமான ஸ்டான்சில் காமெடி செய்தார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பிரைம் மினிஸ்டர் லெவனுக்கு ஆடிய ஆஸ்திரேலிய முன்னாள் ஒருநாள் அணிக் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கானெராவில் இன்று பவுலருக்கு அரை முதுகைக் காட்டிக் கொண்டு ஸ்லிப் பீல்டரைப் பார்ப்பது போன் ஸ்டான்சில் கழுத்தை வளைத்து பவுலரை பார்க்கும் விதமாக நின்றது பெரிய காமெடியாகி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

அதுவும் தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்புயல் லுங்கி இங்கிடி வீசும்போது இப்படி ஜார்ஜ் பெய்லி அவருக்கு ஏறக்குறைய முதுகைக் காட்டிக் கொண்டு நின்றது பெரும் விசித்திரமாகப் பார்க்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்காவின் 174 ரன்கள் இலக்கை பிரைம்மினிஸ்டர் லெவன் விரட்டி வென்றது, ஜார்ஜ் பெய்லி 76 பந்துகளில் 51 நாட் அவுட். இவர் நாட் அவுட்டாகத் திகழ்ந்தது அவரது ஸ்டான்ஸினால்தானோ என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close