புவனேஷ்குமாரின் மிரட்டல் பந்துவீச்சு; திணறிய லக்னோ அணி... ஹைதராபாத்துக்கு 166 ரன்கள் இலக்கு!


லக்னோ ஹைதராபாத்

ஐபிஎல் போட்டியில் இன்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 165 ரன்கள் எடுத்துள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் 57வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் ஆடிவருகின்றன.

லக்னோ ஹைதராபாத்

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குயிண்டன் டீகாக் 2 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கே.எல்.ராகுல் நிதானமாக ஆடினார். அடுத்து களமிறங்கிய ஸ்டொய்னிஸும் 3 ரன்களில் அவுட்டானார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் ராகுலும் 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக க்ருணால் பாண்டியா ஓரளவு சிறப்பாக ஆடி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஆடிய நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயுஸ் படோனி சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது.

புவனேஷ்குமார்

பூரன் 26 பந்துகளில் 48 ரன்களையும், படோனி 30 பந்துகளில் 55 ரன்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்திருந்தனர். ஹைதராபாத் அணி சார்பாக புவனேஷ்குமார் 2 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x