முட்டுக்கட்டை போட்ட மும்பை இந்தியன்ஸ்... 174 ரன்களை இலக்காக நிர்ணயித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!


மும்பை அணி

இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எதிரான ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்தது.

ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். ஒருபுறம் ஹெட் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க மறுமுனையில் அபிஷேக் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து மயங்க் அகர்வாலும் 5 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து, நிதீஷ் ரெட்டி ஜோடி ஓரளவு நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிவந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹைதராபாத் அணி

ஹெட்டை தொடர்ந்து நிதீஷ் ரெட்டி (20 ரன்கள்), க்ளாசன் (2 ரன்கள்), மார்கோ ஜேன்சன் (17 ரன்கள்), ஷாபாஸ் அகமது (10 ரன்கள்), மார்கோ ஜான்சென்(17 ரன்கள்), அப்துல் சமது( 3 ரன்கள்) என அடுத்தடுத்து சீட்டுக்கட்டுகள் போல விக்கெட்டுகள் சரிந்தன. ஆனால் கடைசியாக கேப்டன் பாட் கம்மின்ஸ் அதிரடி காட்டி 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இதனால் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் பியூஸ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் என்ற இலக்கோடு மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x