ஒலிம்பிக் போட்டி... 4x400 ரிலே போட்டியில் பங்கேற்க இந்திய வீரர், வீராங்கனைகள் தேர்வு!


இந்திய பெண்கள் ரிலே அணி பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி

பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இந்திய ரிலே ஓட்டப்பந்தய வீரர் மற்றும் வீராங்கனைகள் அணி தகுதி பெற்றுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2024ம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலகம் முழுவதுமிருந்து 10,500 வீரர் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்திய ஆண்கள் ரிலே அணி பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி

இதையொட்டி பல்வேறு நாடுகளிலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பஹாமாஸ் நாட்டில் 4x400 ரிலே தொடர் ஓட்ட போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வந்தது. இதில் இந்தியாவின் ஆண்கள் அணி சார்பில் அமோஜ் ஜேக்கப், யஹியா, அஜ்மல் மற்றும் ஆரோக்கியா ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் பிரிவில் ரூபால், ஜோதிகா, பூவம்மா மற்றும் சுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய பெண்கள் ரிலே அணி பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி

இதில் இந்திய ஆண்கள் அணி 3:03:23 நிமிடங்களில் வெற்றி இலக்கை எட்டி, இரண்டாம் இடம் பிடித்தது. இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை அவர்கள் உறுதி செய்தனர். இதேபோல் பெண்கள் அணி 3:29:35 நிமிடங்களில் வெற்றி இலக்கை எட்டி இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினர். இதன் மூலம் பெண்கள் அணியும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். இரு அணிகளுக்கும் இந்திய தடகள கூட்டமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

x