டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் தொடங்க இருக்கிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. இதில் பங்கேற்கும் 20 அணிகளும் வரும் மே 1ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட அணியை அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
நேற்று உலகக்கோப்பையில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்கும் ஜோஸ் பட்லர் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில், ‘மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட்’ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
தமிழக அரசு உஷார்... கேரளாவில் வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல் பரவல்!
பழிக்குப்பழி... திருச்சியில் பிரபல ரவுடி முத்துக்குமார் பட்டப்பகலில் படுகொலை!
தூக்க கலக்கத்தில் பாறையில் மோதிய வேன் ஓட்டுநர்... 31 பேர் படுகாயம்!
வாக்கு எண்ணும் மையத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபர்... சுற்றி வளைத்து கைது செய்த போலீஸார்!
கார் மீது சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!