ஒருநாள் தொடரை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலிய அணி: இந்திய மகளிர் அணி படுதோல்வி!


இந்திய மகளிர் அணியை வொயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி

இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட்வாஷ் வெற்றியை ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்த நிலையில், இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இதையடுத்து 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

தொடர் நாயகன், ஆட்ட நாயகன் விருது வென்ற ஃபீபி லிட்ச்பீல்ட்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக விளையாடிய ஃபீபி லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும், கேப்டன் ஹீலி 82 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமஞ்சோத் கவுர் 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா, பூஜா வஸ்திரகர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா அணி 338 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி கடைசி போட்டியில் 148 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி

339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 29 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதையடுத்து வந்த அனைத்து வீராங்கனைகளும் சொற்பரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் 32.4 ஓவர்களில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலியா 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் 3-3 என்ற கணக்கில் வொயிட்வாஷ் செய்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஜோர்ஜியா வேரம் 3 விக்கெட்டுகளையும், அனபெல் சதர்லேண்ட், அலேனா கிங், மேகன் ஷட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியின் சிறந்த வீராங்கணையாகவும், தொடரின் சிறந்த வீராங்கனையாகவும், ஃபீபி தேர்வு செய்யப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


பிரதமர் விழாவில் சர்ச்சையை கிளப்பிய முதல்வர்... கொந்தளிக்கும் பாஜக!

அடம்பிடிக்கும் காங்கிரஸ்... கறார் காட்டும் திமுக... கூட்டணியில் திடீர் சிக்கல்!

x