ஒரே ஆண்டில் 101 சிக்சர்கள் அடித்து முதல் முறையாக 100 சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஐக்கிய அரபு அமிரேட் வீரர் முகமது வாசீம் படைத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமிரேட் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆப்கானிஸ்தான் அணி அங்கு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் யு.ஏ.இ., வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் அந்த அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 3வது முறையாக 20 ஓவர் போட்டிகளில் வென்று யு.ஏ.இ., அணி வெற்றியை பதிவு செய்தது. இந்த நிலையில் யு.ஏ.இ., அணியின் கேப்டனான முகமது வாசீம் இந்த போட்டியில் 32 பந்துகளுக்கு 53 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் 2023ம் ஆண்டில் மட்டும் 101 சிக்சர்கள் அடித்து அசத்தியுள்ளார்.

மேலும் ஒரே ஆண்டில் நூறு சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் ரோகித் சர்மா உள்ளார். 2023ம் ஆண்டு 80 சிக்சர்களும், 2019ம் ஆண்டு 78 சிக்சர்களும், 2018ம் ஆண்டு 74 சிக்சர்களும் அடித்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக சூரியகுமார் யாதவ் 74 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இருப்பினும் முகமது வாசீம் 47 போட்டிகளில் விளையாடி இந்த 101 சிக்சர்களை அடித்துள்ளார். ஆனால் கடந்த 2012ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிஸ் கெயில் வெறும் 26 போட்டிகளில் 59 சிக்சர்கள் அடித்து குறைந்த போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதையும் வாசிக்கலாமே...
நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!
அதிகாலையில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!
குட்நியூஸ்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு 27 இடங்களில் இலவச வைஃபை சேவை!
அதிர்ச்சி... ஒன்றரை வயது மகனின் கையை உடைத்த தாய்: காதலனுடன் எஸ்கேப்!
புது வருஷத்தில் தெறிக்க விட்ட சாக்ஷி அகர்வால்... வைரலாகும் புகைப்படங்கள்!