உலகின் நம்பர் 1 கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியின் ஜெர்சி நம்பருக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டது.
உலக கால்பந்து வீரர்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் லயோனல் மெஸ்ஸி. அர்ஜெண்டினா தேசிய கால்பந்து அணியின் கேப்டனாகவும், ஃபார்வர்டு வீரராகவும் உள்ளார். கிளப் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக விளையாடி அவர், தற்போது, அமெரிக்காவின் இண்டர் மயாமி அணிக்காக விளையாடி வருகிறார். 8 முறை தங்கப்பந்து விருதும், ஒருமுறை சில்வர் பூட் விருதும் பெற்றவர். சர்வதேச போட்டிகளில் 106 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். 2021ம் ஆண்டு நடைபெற்ற கோப்பா அமெரிக்கா, 2022ம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் அர்ஜெண்டினா அணியை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்தவர்.
இப்படி பல சாதனைகளை படைத்துள்ள மெஸ்ஸியின் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அறிவித்து அர்ஜெண்டினா கால்பந்து வாரியம் அறிவித்துள்ளது. அர்ஜெண்டினா அணியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு அந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது நாங்கள் அவருக்கு அளிக்கும் சிறிய மரியாதை என அர்ஜெண்டினா கால்பந்து வாரியம் தெரிவித்துள்ளது. இதே போல சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்சி நம்பர் 7க்கு ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
நீதிமன்றத்தில் நாளை பட்டியலிடப்படும் சொத்துக் குவிப்பு வழக்குகள்: தமிழக அமைச்சர்கள் கலக்கம்!
அதிகாலையில் சோகம்... வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் பலி!