பந்துவீச கூடுதல் நேரம்... இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிகள் குறைப்பால் அதிர்ச்சி!


ரோகித் ஷர்மா, ரபாடா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 32 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல், விராட் கோலி தவிர வேறு எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேநேரம், பந்து வீச்சிலும் பும்ரா தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. இதுகுறித்து தனது அதிருப்தியை கேப்டன் ரோகித் ஷர்மா பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணி

இந்த தோல்வியால் 2023-2025ம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும், பின்னடைவாக இந்திய அணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்தைவிடப் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதையடுத்து, போட்டி நடுவர், போட்டி ஊதியத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்தார். மேலும், டெஸ்ட் சாம்பியன் பட்டத்திற்கான புள்ளிகளிலிருந்து, 2 புள்ளிகளும் குறைக்கப்பட்டது. இது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, தோல்விக்கு பதிலடி கொடுக்கும் என ரோகித் ஷர்மா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 4 சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நடிகர் விஜய் மீது செருப்பு வீச்சு?! எதிர்த்து கோஷமிட்ட ரசிகர்கள்!

x