இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த டீன் எல்கர்; இரட்டை சதத்தை தடுத்த ஷர்துல் தாகூர்


185 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் சாதனை

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்து 185 ரன்கள் குவித்த டீன் எல்கர், ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்து 200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் துவங்கியுள்ள நிலையில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவக்கிய தென்னாப்பிரிக்க அணியில் டீன் எல்கர் இந்திய அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டார்.

200 ரன்கள் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்

அந்த அணியில் மார்கோ ஜான்சன் 72 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் டேவிட் பெடிங்கம் 56 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். ஆனால் மறுபுறம் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் டீன் எல்கர் சிதறவிட்டு சதம் கடந்தார். இதன் பின்னரும் அவரது ருத்ர தாண்டவம் தொடர்ந்த நிலையில் 200 ரன்களை கடப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 185 ரன்கள் எடுத்திருந்த போது, ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அஸ்வின் 490 விக்கெட் வீழ்த்தி சாதனை

இதன் மூலம் 3வது நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது, 7 விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 490வது விக்கெட் ஆகும். தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியை விட 142 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!

x