[X] Close

கேதார் ஜாதவ்வை ஏன் அணியில் எடுக்கவில்லை? - எம்.எஸ்.கே. பிரசாத்தின் கறார் விளக்கம்


mskprasad-comments

கேதார் ஜாதவ். | படம்: ஜி.பி.சம்பத் குமார்

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 15:50 pm
  • அ+ அ-

தான் முழு உடல் தகுதி பெற்றும் தியோதர் டிராபியில் ஆடியும் மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்று கேதார் ஜாதவ் தன் ஆதங்கம் முழுதையும் கொட்டிய நிலையில் இந்திய அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் காரணங்களை விளக்கியுள்ளார்.

“கேதார் ஜாதவ்வை ஏன் எடுக்கவில்லை என்றால் அவரது உடல்தகுதி நிலை வரலாறை வைத்துத்தான். இதற்கு முன்னரும் கூட கேதார் ஜாதவ் உடல்தகுதியுடன் வந்துள்ளார், ஆனால் வந்தவுடன் மீண்டும் காயமடைந்து வெளியேறுவார். இதற்கு கடந்த ஆசியக் கோப்பை போட்டி பல உதாரணங்களில் ஒரு சந்தர்ப்பம்.

மேலும் நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் இந்தியா ஏ வெற்றி பெற்றிருந்தால் கேதாருக்கு இன்னொரு போட்டி ஆட வாய்ப்பு கிடைத்திருக்கும். அதை வைத்து அவரது உடல்தகுதியை நியாயமாக நாங்கள் மதிப்பிட்டிருக்க முடியும். ஆனால் ஜாதவ் அணி தோற்று வெளியேறியுள்ளது, அவருக்கு அந்த வாய்ப்பு இனி கிடைக்காது.

இந்தியா ஏ இன்னொரு போட்டியில் ஆடியிருந்தால் கூடுதல் வீரராக இந்திய அணியில் 4வது ஒருநாள் போட்டிக்கு அவரைச் சேர்க்கலாம் என்றுதான் இருந்தோம். அணியைத் தேர்வு செய்யும் போது நாங்கள் சில நடைமுறைகளைக் கடைபிடித்தாக வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்து கொண்டால் நல்லது.” என்று பிரசாத் தெரிவித்தார்.

இந்திய அணி இந்த ஆண்டு விளையாடும் கடைசி 3 ஒருநாள் போட்டிகள் இது, இதன் பிறகு நிறைய டி20 போட்டிகள் உள்ளன, அதற்கு ஜாதவ் இருப்பாரா என்பது தெரியாத ஒரு விஷயம். இப்போது அவர் மகாராஷ்டிரா, விதர்பா ரஞ்சி போட்டியில் நவம்பர் தொடக்கத்தில் ஆட வேண்டியதுதான்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close