மீண்டும் ஃபார்முக்கு வந்த சூர்யகுமார் யாதவ்... பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சராக்கிய மும்பை இந்தியன்ஸ்!


சூர்யகுமார் யாதவ்

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 192 ரன்கள் எடுத்துள்ளது.

முல்லான்பூரில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 8 ரன்களில் ரபாடா பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

சூர்யகுமார் யாதவ் ரோகித் ஷர்மா

இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி மும்பை அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.சூர்யகுமார் யாதவ் காயத்திலிருந்து மீண்டு தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் பவுண்டரி, சிக்ஸர் என விரட்டினார். இதன் மூலம் 34 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரை சதத்தை கடந்தார்.

மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் ஷர்மா 25 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவர் மூன்று சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகளும் அடித்தார். தொடர்ந்து சூர்யகுமாருடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. கடைசிகட்டத்தில் 53 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து சூர்யகுமார் அவுட்டானார்.

பஞ்சாப் அணி

தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 10 ரன்கள், டிம் டேவிட் 14 ரன்கள், ஷெப்பர்டு 1 ரன்கள், நபி 0 ரன்களில் ஆட்டமிழக்க, திலக் வர்மா 18 பந்துகளில் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் தரப்பில் ஹர்ஷப் படேல் 3 விக்கெட்கள், சாம் கரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து பஞ்சாப் அணி ஆடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x