உலகக்கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி; சச்சினிடம் வழங்கினார் பிரதமர்!


சச்சின் மோடி

வாரணாசியில் இன்று நடைபெற்ற புதிய மைதானத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரிடம் இந்திய அணியின் புதிய ஜெர்சியை வழங்கியுள்ளார்.

சிறந்த ஆன்மீக தலமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தற்போது அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு இன்று பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வருகை தந்துள்ளார். இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

உலகக்கோப்பை புதிய ஜெர்சி

வாரணாசியில் உள்ள கஞ்சாரி பகுதியில் ரூ.450 கோடி செலவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்படவுள்ளது. கிட்டத்தட்ட 31 ஏக்கர் பரப்பரளவில் கட்டப்படும் இந்த மைதானம் 30,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டப்பட உள்ளது. டிஸ்ப்ளே ஸ்கோர்போர்டு, ஃப்ளட் லைட்கள், கார்ப்பரேட் பாக்ஸ்கள், பயிற்சிப் பகுதிகள், விஐபி ஓய்வறைகள், செய்தியாளர் சந்திப்பு மண்டலம் மற்றும் அலுவலகப் பகுதிகள் என்று அனைத்து வசதிகளுடன் கூடியதாக இந்த மைதானம் கட்டப்படவுள்ளது.

இந்த நிலையில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரையில் இந்தியாவில் நடக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஐசிசி வெளியிட்டது. அதுமட்டுமின்றி உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியம்

இந்த நிலையில், தான் இன்று வாரணாசிக்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் புதிய ஜெர்சியை வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா இணைந்து பிரதமர் மோடிக்கு பேட்டை பரிசாக வழங்கியுள்ளனர்.

x