சதமடித்த சஞ்சு சாம்சன்... தென்னாப்பிரிக்காவிற்கு 297 ரன்கள் இலக்கு!


சதமடித்து சஞ்சு சாம்சன்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி இந்திய வீரர் சஞ்சு சாம்சன் அசத்தினார். இதனால் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 296 எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி, மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இதையடுத்து தொடரைக் கைப்பற்றுவது யார் என்று முடிவு செய்யும் 3வது ஒருநாள் போட்டி இன்று போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில், ராஜத் பதிதார் 22 ரன்களுக்கும், சாய் சுதர்சன் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ராகுல் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதும், திலக் வர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சாம்சன், திலக் வர்மா அதிரடியால் 296 ரன்கள் குவிந்த இந்திய அணி

சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் 114 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 108 ரன்கள் எடுத்து லிசாட் வில்லியம்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 52 ரன்கள் குவித்து கேசவ் மகராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பியூரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதையும் வாசிக்கலாமே...

x