ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல்... தட்டித் தூக்கியது சென்னை அணி!


Shardul thakur, Rachin ravindra, Daryl Mitchel

நியூசிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன்களான ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல் ஆகியோரை தட்டித் தூக்கியது சென்னை அணி.

IPL Auction 2024

2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மாஸ் காட்டிய வீரர்களுக்கு இந்த ஏலத்தில் ஏகப்பட்ட மவுசு நிலவுகிறது. ஒவ்வொரு அணி நிர்வாகமும் முக்கிய வீரர்களை விலைக்கு வாங்க போட்டா போட்டி போட்டு வருகின்றன.

ஷர்துல் தாக்கூர்

இந்நிலையில், களமானாலும் சரி, ஏலமானாலும் சரி எப்போதும் நிதானத்துடன் இருக்கும் சென்னை அணி இம்முறையும் வழக்கம் போலவே தனது ஸ்டார்டஜி மூலம் அசத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை சென்னை அணிக்காக விளையாடிய ஷர்துல் தாகூர் கடந்த சீசனில் டெல்லி அணிக்காக விளையாடினார். இந்நிலையில், அவர் மீண்டும் சென்னை அணிக்கே திரும்பியுள்ளார். 2 கோடி ரூபாய் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்ட அவரை, ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை எடுத்தது.

ரச்சின் ரவீந்திரா

ஆனால், இம்முறை சர்பிரைஸாக இரண்டு நியூசிலாந்து வீரர்களை தட்டித் தூக்கியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் 3 சதங்கள் அடித்து அசத்திய ரச்சின் ரவீந்திராவின் அடிப்படை விலை ரூ. 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இவரை ஏலத்தில் எடுக்க டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டின. இறுதியாக ரூ.1.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.

டேரல் மிட்சல்

அதேபோல், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு கடைசி வரை டஃப் கொடுத்த டேரல் மிட்சல் இம்முறை ரூ.14 கோடி சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ரூ.1 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட அவரை எடுக்க டெல்லி, சென்னை அணி இடையே கடும் போட்டி நிலவியது. அதில் இறுதியாக சென்னை அணி அவரை வாங்கியது. சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்ட நிலையில், அவரது இடத்திற்கு மிட்சலை வாங்கியுள்ளது சென்னை அணி.

இதையும் வாசிக்கலாமே...


இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்

விவாகரத்து ஆனதும் மகனைத் தத்துக் கொடுத்த சின்னத்திரை நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

x