ஐபிஎல் மினி ஏலம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைக்கும் வீரர்கள் யார்?


சென்னை சூப்பர் கிங்ஸ்

நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் எந்த வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றும் என்றும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

2024 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நாளை டிசம்பர் 19ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 77 வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் 30 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

இந்த ஏலத்தில் நடப்பு சாம்பியன் ஆக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கெனவே சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டிருப்பதால் 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதேபோன்று அம்பத்தி ராயுடுவையும் விடுவித்திருப்பதால் மேலும் ஒரு ஆறு கோடி சிஎஸ்கேவுக்கு கிடைத்திருக்கிறது. சிஎஸ்கே அணி மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஆறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதனால் வரும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி 31 கோடியே 40 லட்சம் ரூபாய் தொகையுடன் களம் இறங்குகிறது.

ஐபிஎல் ஏலம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. கடந்த சீசனில் இலங்கை வீரர் மதிஷா பதிராணாவை வைத்து சிஎஸ்கே சமாளித்தது. ஆனால் அவரை மட்டும் நம்புவது சரி கிடையாது. இதனால் சிஎஸ்கே அணி தங்களுக்கு இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை வாங்க திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக ஏற்கெனவே 2020ல் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் சிஎஸ்கேவுக்கு நல்ல வீரராக திகழ்வார். இதேபோன்று சிஎஸ்கே அணி தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோயிட்சேவை மினி ஏலத்தில் குறி வைத்து வாங்க வாய்ப்பு உள்ளது.

சிஎஸ்கே அணி

இதேபோன்று ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் குறி வைக்கலாம். சர்துல் தாக்கூர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர். ஆனால் தாக்கூரை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்க கூடாது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

x