தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக கே.எஸ் பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 போட்டியில் இரு அணிகளும் 1-1 சமனில் உள்ளன. இன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், மேட்ஸ்மேனான இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எஸ் பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா (கேப்டன்) தலைமையில் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, கே.எஸ் பாரத் ஆகியோர் இடம் பெறுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... ஆளுநருக்கு எதிராக கல்லூரிகளில் பேனர்! களத்தில் இறங்கிய மாணவர் அமைப்பு!