சென்னையில் சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டம்... கூடுதல் ரயில்கள் இயக்க ஏற்பாடு!


சென்னை கொல்கத்தா அணிகள்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 8ம் தேதி நடக்க உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதும் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, சிந்தாதிரிப்பேட்டை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே அணி வீரர்கள்

17வது ஐபில் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டங்கள், பெரும்பாலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வருகின்றனர். அதனால், சிஎஸ்கே ஆட்டங்களுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையும் களைக்கட்டி வருகிறது.

இந்நிலையில், வரும் 8ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 7.30 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியது. சில மணி நேரங்களில் முழு டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.

ஐபிஎல் போட்டிக்கான ரயில்கள் இயக்கப்படும்

இந்நிலையில், போட்டி முடிவதற்கு 11 மணிக்கு மேல் ஆவதால், இரவு நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரசிகர்களிடையே கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று, சென்னை - கொல்கத்தா போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதிக்காக கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதாவது, சிந்திாரிப்பேட்டை - வேளச்சேரி இடையே கூடுதல் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

வேளச்சேரியில் இருந்து சிந்தாரிப்பேட்டைக்கு இரவு 10.40 மணி, 11.05 மணிக்கும், மறுமார்க்கமாக சிந்தாரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 11.20 மணி, 11.45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

x