ஏலம் விடப்பட்ட மெஸ்ஸியின் ஜெர்சிகள்... ரூ.65 கோடிக்கு விற்பனையாகி சாதனை!


Messi Jersy

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சிக்கள் ஏலத்தில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

Messi Jersy

2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் 35 ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி 3-வது உலகக்கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் பிரான்ஸை 4-2 என பெனால்டியில் தோற்கடித்து அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் மெஸ்ஸி மொத்தம் ஏழு கோல்களை அடித்ததுடன் இந்த உலகக்கோப்பை தொடரில் 5 ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்று அசத்தினார்.

Messi Jersy

இந்த உலகக்கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் கடந்த வியாழன் அன்று ஏலத்தில் விடப்பட்டன. இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.

ஒரு வீரருக்கு சொந்தமான பொருள் ஒன்று அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த 6 ஜெர்சிகளில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகி உள்ளதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பகீர்... தாயை கொன்று சூட்கேசில் வைத்து ரயிலில் பயணித்த மகன்!

x