ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி தகுதி பெற்றது.
ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் ஒடிஷா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. ஆட்டவர், மகளிர் என இரு பிரிவிலும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்கள் நடைபெற்றது. கடந்த சில நாட்களாக முதல் 3 சுற்று ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், நேற்று கால்இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி தைவானின் சுங் ஷுயோ யுன் - யு சியன் ஹுய் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
இன்று நடைபெற்ற அரையிறுதியில் அஸ்வினி - தனிஷா ஜோடி இந்தோனேஷியாவின் ஆர்லியா நபிலா தீசா முங்கரன் - அக்னியா ஸ்ரீ ரஹாயு ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-17, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் மெய்லிசா ட்ரயாஸ் புஸ்பிதசாரி - ரேச்சல் அல்லேஸ்யா ரோஸ் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு 3வது இறுதி போட்டிக்கு இந்திய ஜோடி தகுதி பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... தாயை கொன்று சூட்கேசில் வைத்து ரயிலில் பயணித்த மகன்!