இந்தியாவில் அடுத்து டி10 கிரிக்கெட்... பிசிசிஐ திட்டம்!


T10 cricket

இந்தியாவில் டி10 எனப்படும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

T10 cricket

கால்பந்து லீக் தொடர்களை போல், கிரிக்கெட்டிலும் லீக் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதனையடுத்து, கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் இத்தொடரின் வீச்சு அதிகரித்து வருகிறது. இந்த தொடரை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டி10 கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபரில் இத்தொடர் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கெனவே அபுதாபி, அமெரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் டி10 தொடர் நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியாவும் டி10 தொடரை ஐபிஎல் அணிகளை வைத்து நடத்தலாம் என முடிவெடுத்திருக்கிறது.

BCCI, Jay shah

இதன் மூலம் கூடுதல் லாபத்தை ஈட்ட முடியும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா திட்டமிட்டுள்ளார். இதற்கான காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு இல்லை 2025 ஆண்டு முதல் மினி ஐபிஎல் என்ற பெயரில் டி10 போட்டிகள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டி10 தொடர் வந்தால் அது கிரிக்கெட்டின் என்னும் விளையாட்டையே சிதைத்துவிடும் என பலர் குற்றம்சாட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!

x