தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் நேற்று நிறைவடைந்தது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. அதில், 106 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தப் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கின்போது மூன்றாவது ஓவரில் ரீஸா ஹென்ரிக்ஸ் அடித்த பந்தை தடுக்க முயன்ற சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டது.
சிறிது நேர ஆலோசனைக்கு பிறகு இந்திய அணியின் மருத்துவரோடு அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின், 11 ஓவர்களுக்கு அவர் மீண்டும் மைதானத்திற்கு திரும்பவில்லை. இந்நிலையில், ஆட்டம் முடிந்த பிறகு காயம் குறித்து தெரிவித்த சூர்யகுமார் யாதவ், தான் நன்றாக இருப்பதாக கூறினார். தன்னால் நடக்க முடிவதாகவும், நடக்க முடியாத அளவுக்கு தனக்கு ஏற்பட்டுள்ள காயம் பெரிய அளவில் இல்லை என்றும் கூறினார். அணியின் வெற்றிக்கானப் போட்டியில் சதமடிப்பது என்பது மிகவும் அற்புதமானது. அச்சமின்றி விளையாடும் விளையாட்டை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார். 3 விக்கெட்டுகள், 4 விக்கெட்டுகள் எடுப்பதில் குல்தீப் யாதவ் ஒருபோதும் மகிழ்ச்சியடைய மாட்டார். அவருக்கு அவரே சிறந்த பிறந்தநாள் பரிசை கொடுத்துக் கொண்டார் என்று சூர்யகுமார் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!
ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த ஆபாச வீடியோ... டீப் ஃபேக் வீடியோக்களால் கதறும் நடிகைகள்!