கிரிக்கெட் போட்டிகளில் தல தோனி அணிந்து விளையாடிய 7ம் நம்பர் ஜெர்சிக்கு பிசிசிஐ ஓய்வு அளிக்க உள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் உச்ச வீரர்களுள் ஒருவர் மகேந்திரசிங் தோனி. இவரது தலைமையில் இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. மேலும் பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். இவரது சாதனையை இதுநாள் வரை வேறு இந்திய கேப்டன்களும் நிகழ்த்தவில்லை. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. தனிப்பட்ட வீரராக அதிக ரன் குவித்த வீரர்களுள் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டிற்கு முன்னாள் கேப்டன் தோனி செய்துள்ள பங்களிப்பை கெளரவிக்கும் வகையில், அவரது ஜெர்சி நம்பர் '7'க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் '7'ம் நம்பர் ஜெர்சியை இனி இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. இதற்கு முன்னதாக இந்திய முன்னாள் வீரர் சச்சினை கெளரவிக்கும் வகையில், கடந்த 2017ம் ஆண்டு அவரது ஜெர்சி நம்பர் '10'க்கு பிசிசிஐ ஓய்வு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சச்சினுக்கு பிறகு தோனிக்கு அந்த கெளரவம் கிடைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!