இந்தியா அபார வெற்றி... தொடரையும் சமன் செய்தது!


இந்திய தென் ஆப்பிரிக்கா கேப்டன்கள்

நேற்று இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடைப்பெற்ற மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்காவைப் படுதோல்வி அடைய செய்து, தொடரையும் சமன் செய்துள்ளது.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டி - 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. அதில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நேற்று நடைபெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்ய குமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்களில் 95 ரன்கள் மட்டுமே குவித்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி- 20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டியில் கொண்ட டி- 20 கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்துள்ளது. முதல் டி- 20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதும், இரண்டாவது டி-20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

x