இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழல் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி மழையால் ரத்தானது. நேற்று முன்தினம் நடந்த 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் கடைசி மற்றும் 3வது டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்ஸ்பெர்க்கில் இன்று நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி தோல்வியடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னப்பிரிக்கா அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கக்கூடும். 2-வது ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட மார்கோ யான்சன், ஜெரால்டு கோட்ஸி ஆகியோருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...