[X] Close

டுமினியை வைத்து டாஸ் ஜெயித்த டூ ப்ளெஸ்ஸி: ஜிம்பாப்வே டி20யில் சுவாரசியம்


toss-with-dumini

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 Oct, 2018 13:11 pm
  • அ+ அ-

தொடர்ந்து ஆறு ஆட்டங்களில் டாஸில் தோற்றதால், தனக்குப் பதிலாக டாஸ் போட சக வீரர் டுமினியை களத்துக்கு அழைந்து வந்துள்ளார் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ ப்ளெஸ்ஸி. 

தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வேவுக்கு எதிராக டி20 தொடரை ஆடிவருகிறது. கடந்த அக்டோபர் 9 அன்று முதல் போட்டி நடந்தது. மார்ச் - ஏப்ரல் மாதத்திலிருந்து இன்று வரை எந்த டாஸிலும் வெற்றி பெறாததால், தனது அதிர்ஷ்டத்தை மாற்ற சக வீரர் டுமினியை டாஸ் போட அழைத்தார் டூ ப்ளெஸ்ஸி. டுமினி, விளையாடும் அணியில் இடம்பெறவில்லை என்றாலும் டாஸ் போட மட்டும் வந்தார். 

டூ ப்ளெஸ்ஸியின் யோசனை பலித்தது. டுமினி டாஸில் வென்றார். ஆட்டத்திலும் தென்னாப்பிரிக்கா வென்றது.

"ஒரு கேப்டனின் பலமே அவரது பலவீனதைத் தெரிந்து கொள்வதுதான் என்பார்கள். அதனால்தான் டாஸ் போட்டும் நிபுணராக டுமினியை அழைத்து வந்தேன்" என்றார் டூ ப்ளெஸ்ஸி.

பின்னர் இந்த டாஸ் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த டூ ப்ளெஸ்ஸி, "என் வேலை எனக்குப் பிடிக்கும். அதே நேரத்தில் மகிழ்ச்சியாக இருப்பதும் முக்கியம். அதிலும் டி20 கிரிக்கெட்டில் முக்கியம். நான் புதிதாக ஒரு வழக்கத்தை ஆரம்பித்துவிட்டேன் என நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். 

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close