[X] Close

விராட் கோலியைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவை 'பிடிக்க வந்த' ரசிகர்


fan-invades-pitch

ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்து முத்தமிட்ட ரசிகர்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 Oct, 2018 13:00 pm
  • அ+ அ-

தன்னைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, காலில் விழுந்து வணங்கிய ரசிகர் ஒருவரால் ரோஹித் சர்மா அதிர்ச்சியடைந்தார். 

சமீபத்தில் நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் ரசிகர் ஒருவர், பாதுகாப்பை மீறி களத்துக்குள் புகுந்து, கோலியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முயற்சித்தார்.

தற்போது விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை - பிஹார் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, வேலியைத் தாண்டி மைதானத்துக்குள் குதித்த ரசிகர் ஒருவர், களத்தில் ஆடிக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவிடம் ஓடிச் சென்று அவரை முத்தமிட்டார். அதிர்ச்சியான ரோஹித் சர்மா ரசிகரை விலக்க முயற்சிக்க, அவர் மீண்டும் முத்தமிட முயற்சித்து பின் காலில் விழுந்து வணங்கி நன்றி சொல்லிவிட்டு மீண்டும் ரசிகர்கள் அமரும் இடத்துக்கு ஓடிச் சென்றார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close