[X] Close

ஆஸ்திரேலிய தொடரில் பிரித்வி ஷா, ரிஷப் பந்த்? - கோலி சூசகம்


kohli-about-young-guns

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 Oct, 2018 12:50 pm
  • அ+ அ-

வருட இறுதியில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் இளம் வீரர்கள் பிரித்வி ஷாவும், ரிஷப் பந்தும் விளையாடலாம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நடந்து முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி அபாரமாக வென்றது. இந்தத் தொடரின் மூலம் அறிமுகமான இளம் வீரர் பிரித்வி ஷா, தொடரில் 237 ரன்கள் அதிரடியாகச் சேர்த்து, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 184 ரன்களை சேர்த்திருந்தார்.

இரண்டு இளம் வீரர்களின் ஆட்டத்தையும் பாராட்டிய கோலி, வரவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், இவர்கள் இந்தியாவின் விசேஷ ஆயுதங்களாக இருக்கலாம் எனத் தெரிவித்தார். 

"இளம் வீரர்கள் எந்தக் கட்டுபாடும் இன்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்று நினைத்தோம். அவர்கள் அப்படி ஆடினார்கள். பிரித்வி அற்புதமாக ஆடினார். ரிஷப் அச்சமின்றி ஆடினார். இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. 

சூழ்நிலை அவ்வளவு சவாலாக இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முக்கியமான பண்பு தன்னம்பிக்கையும், ரன் அடிக்க முடியும் என்ற புரிதலும் தான்." என்று கோலி தெரிவித்தார். 

ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், முதல் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை பிரித்விஷா படைத்தார். 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close