இங்கிலாந்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று கென்சிங்டன் ஓவல் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஃபில் சால்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். சால்ட் 40 ரன்கள், பட்லர் 39 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் 19.3 ஓவரில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டும் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்ஜாரி ஜோசப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரொமாரியோ ஷெப்பர்ட் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் பிராண்டன் கிங் 22 எண்களில் ஆட்டம் இழந்தார். ஆனால், கையில் மேயர்ஸ், ஷை ஹோப் ஆகியோர் நல்ல துவக்கம் அளித்தனர். இதனால் அந்த அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கான 172 ரன்களை எட்டியது. இதன் மூலம், 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தி, 29 ரன்கள் எடுத்த ரசல் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை பெற்றுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று முதல் பொங்கல் விடுமுறைக்கான முன்பதிவு துவங்குகிறது!
அதிர்ச்சி... எண்ணூர் துறைமுகத்தில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை!
விஜய் முதல் குஷ்பு வரை.... திரையுலகில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள்!
200 ஆண்டுகள் பழமையான 220 டன் கட்டிடம் இடமாற்றம்; 700 சோப்புக்கட்டிகள் உதவியோடு சாதித்த பொறியாளர்கள்
19 வயது இன்ஸ்டா பிரபலம் மரணம்... அறுவை சிகிச்சைக்கு பின்பு நேர்ந்த துயரம்!